கல்முனையில்,வீடுகளுக்குள் மழை நீர்




 


கல்முனையில் மழை நீர் செல்லும் வடிகான் முறையான பராமரிப்பு இன்மையினால் பொது மக்களின் வீடுகளுக்கு மழை நீர் உட் செல்லும் நிலை...!

------------------

(எம்.என்.எம்.அப்ராஸ்)


கல்முனையில் இன்று (13) மதியம் தொடக்கம் 

பெய்து வரும் மழையால் பொது மக்கள் பெரும் அசொளகரியத்தை எதிர் நோக்கினர்.


கல்முனை மாநகரசபையினால் மழை நீர் செல்லும் வடிகான் முறையான பராமரிப்பு இன்மையினால்

வீதிகளுக்கு மேல் மழை  நீர் வருவதுடன் 

பொது மக்களின் வீடுகளுக்கு மழை நீர் உட் செல்லும் நிலையில் உள்ளதுடன் வெள்ள நீர் வீடுகளுக்கு செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையினை பொது மக்கள் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. 


பொறுப்பு வாய்ந்த கல்முனை மாநகர சபை அதிகாரிகள் மழை  நீர் வடிகான்களை விரைந்து 

சீர் செய்யுமாறு  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.