அன்னமலையில் களைகட்டிய சிறுவர் தின விழா





 ( காரைதீவு  சகா)

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தின் சர்வதேச சிறுவர் தினவிழா அதிபர் பொன். பாரதிதாசன் முன்னிலையில் சிறப்பாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

 மாணவர்களின் கலை ஆற்றுகைகள் அங்கே பெற்றோர்களின் உதவியுடன் நிறைய வெளிப்பட்டது .

பாடசாலை இணைப்பாளர் எஸ்.மோகனும் கலந்து சிறப்பித்தார்.