வாழ்வாதார உதவி




 



( பாறுக் ஷிஹான்) 


மீனவ குடும்பங்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவர்கள்  சமூகத்தில் சிறந்த மனிதர்களாகவும் தலைமைத்துவம் கொண்டவர்களாகவும் உருவாக்கும்   ஒரு அங்கமாக   இன்று மாலை மட்டுப்படுத்தப்பட்ட காரைதீவு விநாயகர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த 53   தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பத்தை சேர்ந்தோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் மற்றும்  முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா  ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் காரைதீவு  கடற்கரை பிள்ளையார் ஆலய முன்றலில் காரைதீவு விநாயகர் மீனவர் கூட்டுறவுச் சங்க செயலாளர் ர.சுஜீதன்  நெறிப்படுத்தலில் காரைதீவு  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரிவு 3 மற்றும் 4 பகுதியை சேர்ந்த  மீனவ குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சீனி போன்ற பெறுமதியான உலர் உணவு பொருட்கள்   வழங்கி வைக்கப்பட்டன.

 

இதன் போது அங்கு  உரையாற்றிய  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் மற்றும்  முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.அத்துடன் ஒரு முஸ்லிம் ஒரு சிங்கள வேட்பாளர் உட்பட 10 பேர் மாவட்டத்தின் பொத்துவில்  சம்மாந்துறை  காரைதீவு  கல்முனை  பிரதேசங்களில் இருந்து வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 

இதன்போது காரைதீவு விநாயகர் மீனவர் கூட்டுறவுச் சங்க தலைவர் துரைரெத்தினம்  பொருளாளர் சு.கணேஸ் உள்ளிட் சங்க  உறுப்பினர்களும்   கலந்து கொண்டிருந்தனர்.