காஸா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்- தற்போதைய நிலைமை என்ன?






இஸ்ரேலில் ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதன் ஓராண்டு நிறைவு நாளில், காஸா, லெபனான் ஆகிய இரு பிரதேசங்களிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இஸ்ரேலை நோக்கி ஹமாஸ், ஹெஸ்பொலா அமைப்புகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.


அதேவேளையில், ஹமாஸிடம் இன்னும் பணயக்கைதிகளாக சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான ஒப்ந்தத்தை இறுதி செய்யுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உள்நாட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளது. பணயக்கைதிகளின் உறவினர்கள் பிரதமர் இல்லத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த ஆண்டு ஹமாஸிடம் இருந்து எதிர்பாராத தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல், இந்தாண்டு அதேநாளில் என்ன செய்கிறது? மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?


டைனோசரை சிறுகோள் அழித்த காலத்தில் பூமியில் பேரழிவை ஏற்படுத்திய மற்றொரு பொருள் - என்ன நடந்தது?

7 அக்டோபர் 2024

தாமிரபரணியில் நீர்நாய்களின் எண்ணிக்கை குறைவதால் என்ன பிரச்னை?

காஸா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்

லெபனானின் சில பகுதிகளில் இன்று(அக்டோபர் 7) காலை பல வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.


விளம்பரம்


லெபனானில் கிழக்கே உள்ள க்சர்னபாவின் புறநகர்ப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தெற்கு பகுதியில் உள்ள ஜ்ராரியே மற்றும் பிரைக்கா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் விடியற்காலையில் வான்வழி தாக்குதல் ஒன்று நடந்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகின்றது.


காஸா முழுவதும் ஹமாஸின் ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நிலத்தடி வழிகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கியது. அதே நேரத்தில் இஸ்ரேல் படையினருக்கு அச்சுறுத்தலாக இருந்த காஸா முனையின் மையத்தில் உள்ள இலக்குகள் மீதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.


காஸா முழுவதிலும் உள்ள ஹமாஸின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


மனித குடலில் வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்


ஹமாஸ், ஹெஸ்பொலா என்ன செய்கின்றன?

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இருந்து 5 எறிகணைகள் டெல் அவிவ் நகரை நோக்கி வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரின் கிழக்கு எல்லையில் உள்ள அயலோன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தலைக்கு மேலே வெடிப்புகளை கேட்க முடிந்ததாக பிபிசி குழுவினர் தெரிவித்தனர்.


ஹெஸ்பொலாவோ, இஸ்ரேலிய ராணுவ வீரர்களை ராக்கெட்டுகள் மூலம் தாக்குவதாக கூறியுள்ளது. தெற்கு லெபனானில் மரௌன் அல்-ராஸ் பூங்காவில் குழுமியிருந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் குறிவைத்து ராக்கெட்டுகளை ஏவியதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அல்-ஆலம் என்ற இடத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை அதுபோல் குறிவைத்ததாக மற்றொரு அறிக்கையில் ஹெஸ்பொலா கூறியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள க்ஃபார் வ்ராடிம் நகரை நோக்கி ராக்கெட்டுகளை செலுத்தியதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


கலப்பட நெய்யை வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிவது எப்படி?

29 செப்டெம்பர் 2024


படக்குறிப்பு,டெல் அவிவ் நகரின் கிழக்கு எல்லையில் உள்ள அயலோன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

லெபனானுக்கு கூடுதல் படைப்பிரிவை அனுப்பிய இஸ்ரேல்

லெபனானில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூடுதல் படைப் பிரிவை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. தெற்கு லெபனானில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிதாக ஒரு படைப் பிரிவு அனுப்பப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 91வது படைப் பிரிவு கடந்த ஓராண்டுக்கும் மேலாக காஸா மற்றும் வடக்கு இஸ்ரேலில் இயங்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.


இஸ்ரேல் தற்போது அனுப்பியிருப்பது, லெபனான் மீதான தரை வழி தாக்குதலுக்காக அனுப்பப்படும் மூன்றாவது படைப் பிரிவு என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறுகிறது.


இஸ்ரேலை தடுக்க முடியும் என்று ஹெஸ்பொலா நம்பிக்கை

இஸ்ரேல் ஆக்கிரமிப்பை தங்களால் தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஹெஸ்பொலா, தொடர்ந்து போராட உறுதி பூண்டுள்ளது. லெபனானை சேர்ந்த ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா, காஸாவில் செயல்படும் ஹமாஸுக்கு ஆதரவு அளிக்கிறது. இரண்டு குழுக்களுமே இரானிடம் இருந்து நிதி மற்றும் ஆதரவை பெற்றுள்ளன.


அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸின் தாக்குதலை “துணிச்சலானது” என்று ஹெஸ்பொலா பாராட்டுகிறது. இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளைவுகள் உண்டாகும் என்றும் அது கூறுகிறது.


"இஸ்ரேலுக்கு அங்கு இடமே இல்லை, எவ்வளவு காலம் ஆனாலும் சரி, இஸ்ரேல் அகற்றப்பட வேண்டும்” என்று கூறுகிறது ஹெஸ்பொலா.


அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, காஸா மற்றும் லெபனானில் தொடரும் இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ஹெஸ்பொலா குற்றம் சொல்கிறது. அவர்கள் தான் இதற்கு “முழு பொறுப்பு” என்கிறது அந்த அமைப்பு.


பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன?

14 செப்டெம்பர் 2024

குளிர்சாதனப் பெட்டியில் விபத்து நேரிடாமல் தவிர்ப்பது எப்படி? எளிய பராமரிப்பு வழிகள்

14 செப்டெம்பர் 2024

இஸ்ரேல் - இரான் பட மூலாதாரம்,PA Media

படக்குறிப்பு,"நெருப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ளோம்" என்று பிரிட்டனுக்கான இஸ்ரேலிய தூதர் டிசிபி ஹோடோவெலி கூறுகிறார்.

"நெருப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ளோம்"

அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் 'வேறு நிலையில்' இருக்கிறது என்று பிரிட்டனுக்கான இஸ்ரேலிய தூதர் டிசிபி ஹோடோவெலி கூறுகிறார்.


பிபிசியின் ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்த தாக்குதல்களை 'ஒரு முக்கிய திருப்பு முனை' என்று குறிப்பிட்டார். பல்வேறு மக்கள் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர போராடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.


"இரானால் உருவாக்கப்பட்ட நெருப்பு வளையத்தால் நாங்கள் சூழப்பட்டு இருக்கிறோம். ஹெஸ்பொலா, ஹமாஸ் போன்ற இரானின் பினாமிகளால் பல திசைகளில் இருந்தும் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்." என்று அவர் கூறினார்.


சமூகத் தடைகளை உடைத்து அரசியலமைப்பு அவையில் இடம்பிடித்த 15 அரசியல் சாசன நாயகிகள்


இஸ்ரேல் பிரதமர் இல்லத்திற்கு வெளியே போராட்டம்

அக்டோபர் 7-ஆம் தேதி காலையில் ஜெருசலேம் நகரில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. ஹமாஸால் பணயக் கைதிளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அங்கே திரண்டிருந்தனர். பணயக்கைதிகளை மீட்பதற்கான ஒப்பந்தத்தை விரைந்து எட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.


இஸ்ரேல் - இரான் பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ஜெருசலேம் நகரில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்றது.

இரானுக்கு இஸ்ரேல் எப்போது, எப்படி பதிலடி கொடுக்கும்?

(பிபிசி பாதுகாப்புத் துறை செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் அளித்த தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன)


கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கின் பெரும்பகுதி அச்சத்திலேயே இருந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை இரான் நடத்தி ஒரு வாரம் கடந்துள்ளது. ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கான பழிவாங்கும் நடவடிக்கை இது என்று இரான் கூறியது. இந்த தாக்குதலுக்கு இரான் ‘பெரும் விலை’ கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.


இஸ்ரேலின் பதிலடி தாமதமாவதற்கு அங்கு நடைபெறும் பேச்சுவார்த்தைகளே காரணமாகும். இஸ்ரேல் ராணுவம் மற்றும் அதன் அரசியல் தளத்திலும், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.


இரானில் உள்ள எண்ணெய் கிணறுகள், புரட்சிக்கர காவல் படையின் நிலைகள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள், அணு ஆராய்ச்சிக் கூடங்கள் என பலவும் இஸ்ரேலின் இலக்குகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் இலக்குகள் குறித்தவை மட்டுமல்ல, இந்த தாக்குதலின் விளைவுகள் என்னவாக இருக்கும், இரானின் பதிலடி என்னவாக இருக்கும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.


ஒரு முழு வீச்சிலான போரில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுவதை அதுவும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு ஈடுபடுவதில் வெள்ளை மாளிகைக்கு சற்றும் விருப்பமில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வதையும் அமெரிக்கா விரும்பவில்லை. அது அமெரிக்க வாக்காளர்களிடையே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்று வெள்ளை மாளிகை கருதுகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை யூத புத்தாண்டு விடுமுறை முடிந்த பிறகு இஸ்ரேல் தனது பதிலடியை கொடுக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர். மேலும் சிலர், ஹமாஸ் தாக்குதல் நடத்தி அக்டோபர் 7-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதால் திங்கள்கிழமை இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தலாம் என்று எதிர்பார்த்தனர். தாமதமானாலும் கூட, தாக்குதல் நடத்தப்படும் என்பது மட்டும் உறுதி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.