இந்தியாவில் பழைய ‘நீதி தேவதை’யை அகற்றிவிட்டு திறக்கப்பட்ட கண்களுடன், அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திய ‘நீதி தேவதை’யின் புதிய சி லையை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று (16) திறந்து வைத்துள்ளார்.
காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும் முயற்சியாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் கருப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்டு, கையில் வாளுடன் இருந்த பழைய நீதி தேவதை சிலை அகற்றப்பட்டுள்ளது.
நீதி தேவதையின் கண்கள் மூடப்பட்டதற்கான காரணம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நீதி என்பது பணம், அரசியலுக்கு அப்பாற்பட்டது, இது எதுவும் நீதியை பாதிக்கக் கூடாது என்பதாகும்.
மேலும், நீதி தேவதையின் இடது கையில் உள்ள வாள், வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள நீதி தேவதை சிலையின் இடது கையில் வாளுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீதி தேவதை கண்ணில் கட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் அகற்றப்பட்டு, கண்கள் திறந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீதியை வழங்குவதற்கு வாள் தேவையில்லை, அரசியலமைப்பு சாசனம்தான் தேவை என்பதை புதிய நீதி தேவதை சிலை குறிக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பழைய சிலையின் வலது கையில் இடம்பெற்றிருந்த தராசு, புதிய சிலையிலும் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.
மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழங்குவதற்கு முன்னதாக இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை தராசு குறிக்கிறது.
மேலும், புதிய நீதி தேவதை சிலையின் நெற்றியில் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment