சின்னம் சூட்டும் நிகழ்வு




 


ஆலையடிவேம்பு நிருபர்   வி.சுகிர்தகுமார்   

( வி.ரி. சகாதேவராஜா)

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர். ஜே.ஆர்..டேவிட் அமிர்தலிங்கம்  தலைமையில் இன்று (23) புதன்கிழமை பாடசாலையின்  இராமகிருஷ்ணா அரங்கில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக  திருக்கோவில்  வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர்  ஆர்.உதயகுமார் மற்றும் கெளரவ அதிதியாக  கெளரவ நீதிபதி ரி. கருணாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் கல்வி  வலயத்தின்   பிரதி கல்விப்  பணிப்பாளர், ஏ.எம்.. நெளபர்டீன் மற்றும் ஆலையடி வேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளரும், பிரதிக் கல்விப் பணிப்பாளருமானகே..கமலமோகனதாசன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், எஸ்.பி. அகிலன்,பழைய மாணவர்  சங்க உறுப்பினர்.    வி.சுகிர்தகுமார் அவர்களும் பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.