( கல்முனை நிருபர் )
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக
திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும்
வேட்பாளர் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது தந்தை முன்னாள் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூரின் அடக்கஸ்தலத்தில் தூஆ பிராத்தனையின் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நேற்றைய தினம் (12) ஆரம்பித்தார்.
கல்முனை காசிம் வீதியில் நடைபவனியாக ரஹ்மத் மன்சூர் தனது கட்சி ஆதரவாளர்களுடன் தனது அலுவலகம் வரை சென்ற போது பொது மக்கள் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரஹ்மத் மன்சூர் அவர்கள் அம்பாரை மாவட்டத்தில் பொது மக்களுக்கு பல்வேறு சமுக நல
செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment