நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரை சந்தித்து அவ் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட பிராந்திய பணிப்பாளர் சுகாதார மேம்பாடு மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிரும் கலந்துகொண்டார்.
Post a Comment
Post a Comment