விஜயம் ..!





 ( கல்முனை நிருபர்) 


திகாமடுல்ல மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மரச் சின்னம்இலக்கம் இரண்டில் போட்டியிடும் முன்னால் கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் றஹ்மத் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் றஹ்மத் மன்சூர் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை காரியாலயத்திற்கு(21) வருகைதந்து கலந்துரையாடல் மேற்க்கொண்டார்.

 றஹ்மத் மன்சூரினால் விடுக்கப் பட்ட கோரிக்கைக்கு அமைய இச்சந்திப்பு இடம் பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை சார்பில் அதன் தலைவர்,பொதுச் செயலாளர்,பொருளாளர்,உப தலைவர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். ஆரம்பமாக யு.எல்.எஸ்.ஹமிட் (ஹாமி) அவர்களால் வரவேற்பு உரையை நிகழ்த்தினார் பின்னர் றஹ்மத் மன்சூர் அவர்களால் இச்சந்திப்புக்கான நோக்கம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது. 

பின்னர் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எ.எல்.எம்.முர்ஷித்,(சஃதி,நஜ்மி )அவர்களினால் ஜம்இய்யா பற்றிய அறிமுகமும் அதனால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவித அரசியல் கட்சிகள் சார்பற்ற,எல்லா காலங்களிலும் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் சகவாழவோடும் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு சமய நிறுவனமாகும் என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. வாக்களிப்பு என்பது ஓர் அமானிதமாகும் இவ்விடயத்தில் வாக்களிப்பவரும் வாக்களிக்கப்படுபவரும் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புணர்ச்சியுனும் செயற்பட கடமைப்பட்டுள்ளனர் என மேலும் இதன் போது நினைவுபடுத்தப்பட்டது. ரஹ்மத் மன்சூருடன் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரகவி எம்.எஸ்.எம்.நிசார் கலந்து கொண்டார்.