அறுவடை விழா







 மாவடிமுன்மாரியில் விவசாயிகளுக்கான களப்பாடசாலையின் அறுவடை விழா

( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 
கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கத் நிலையத்திற்குட்பட்ட
மாவடிமுன்மாரி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சேதன முறையிலான வீட்டுத்தோட்ட களப் பாடசாலை நிகழ்வின் அறுவடை விழா (11) சனிக்கிழமை நடைபெற்றது.

மாவடிமுன்மாரி விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தர் சு.துஷாந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர்  .மு.பரமேஸ்வரன், தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. நித்யா நவரூபன், வலயம் மத்தி உதவி விவசாய பணிப்பாளர் எஸ். சித்திரவேல் பாடவிதான உத்தியோகத்தர் என்..லட்ஸ்மன், தெற்கு வலய விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,விவசாயிகள் என பலரும் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இயற்கை முறையில் வீட்டுத் தோட்டத்தை செய்கை பண்ணும் முறைமைகள் நாற்று மேடை முதல் அறுவடை வரையில் எவ்வாறான தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும் என செயன்முறை ரீதியான பயிற்சிகள் 12 வாரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தது.
 அதன் இறுதி நாளில் சேதன அறுவடை செய்யப்பட்டதோடு, விவசாயிகளுக்கான உள்ளீடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.