( காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த வாணிவிழா நேற்று (10)வியாழக்கிழமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா சிறப்புஅதிதியாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
அங்கு கணக்காளர் சீ. திருப் பிரகாசம் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யாசிர் அரபாத்
பி.பரமதயாளன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நிர்மலேஸ்வரக் குருக்கள் விசேட பூஜை நடாத்தினார்.
அங்கு இந்து இஸ்லாம் பௌத்த உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த பூஜை இடம் பெற்றது.
கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் வீரமுனை ராமகிருஷ்ணா வித்தியாலயம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
வலய இந்து சமய ஆலோசகர் கே. சந்திரகுமார் வாணிவிழா ஏற்பாடு செய்திருந்தார்.
கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சகா வழங்கிய நூல்ப்பரிசுகள் வழங்கப்பட்டன.
Post a Comment
Post a Comment