தமிழரசுக் கட்சி காரியாலயம் திறப்பு




 



பாறுக் ஷிஹான்


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அருள்ஞானமூர்த்தி நிதான்சனின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் திங்கட்கிழமை(இரவு) திறந்து வைக்கப்பட்டது.

நிதான்சன் ஆதரவணி குறித்த கட்சி அலுவலகத்தை கல்முனை உடையார் வீதியில் திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளரும் வீட்டுச் சின்னம் இலக்கம் 1 இல் போட்டியிடும் வேட்பாளருமான அருள்ஞானமூர்த்தி நிதான்சன் மற்றும் சக வேட்பாளரான பாக்கியம் மஞ்சுளா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

 இதன் போது தற்போதைய பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம் வாக்களிப்பதன் ஊடாக தமிழ் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது கடந்த கால தேர்தல் தவறுகள் பருவ கால தேர்தல் வியாபாரிகளின் செயற்பாடுகள்  எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள  தேர்தல்கள்  உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அங்கு பேசப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.