சிறுவர்கள் திரும்ப வருவேண்டும் எனும் பிராத்தனை





 சர்வதேச ரீதியில் சிறுவர் தினம்  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளில் இலங்கையில் 8மாவட்டங்களிலும்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 

சங்கத்தினரால் போராட்டங்கள் கவனையிர்ப்பு நிகழ்வுகளும் காணாமல் போன சிறுவர்கள் திரும்ப  வருவேண்டும் எனும் பிராத்தனை   என்பன  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுளின் சங்க தலைவி தம்பிராசா செல்லவராணி அவர்களின் தலைமையில் தம்பிலுவில் மத்திய சந்தை வளாத்தில் வடகிழக்கில்  காணமல் ஆக்கப்பட்ட 1000மேற்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டியும் அவர் திரும்பி வரவேண்டும் என மெழுகு வர்த்தி ஏற்றி பிராத்தனையும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.....


அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி இவ் நிகழ்வு பற்றி கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களின் குறித்த சர்வதேச சிறுவர் தினமானது கறுப்பு தினமாக கருதபடுவதுடன்  கடந்த யுத்தகாலத்தில் சரணடைந்த  39 சிறுவர்களின் நிலை என்ன அவர்களுக்கு என்ன நடந்தது  என்று  உண்மை தெரிய வேண்டும் எனவும  உலக அரங்கிலும் சர்வதேசத்திலும் கேட்டு நிற்கின்றோம் எனவும் இனிமேல் இவ் சிறுவர்கள் காணாமல் ஆக்ககூடாது எனவும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கருத்தி இவ் சர்வதேச சிறுவர் தினம் கறுப்பு தினமாக கருதி இலங்கையில் உள்ள 8மாவட்டத்தில் உள்ள வலிந்து  காணாமல் உறவுகளின் சங்கத்தினால்   இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்....


மேலும் இவ் நிகழ்வில் காணமாகல் ஆக்கப்பட உறவுகளின் உறவினர்கள் சிறுவர்கள் என பலரம் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...


ஜே.கே.யதுர்ஷன்

திருக்கோவில் பிரதேசம்......