(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நீதிமன்றை வெடி குண்டுவைத்து தகர்கப் போவதாக வந்த கடிதம் கட்டித் தொகுதியை விசேட அதிரடிப்படையினர் மேப்பநாய் சகிதம் தேடுதல் வேட்டை
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிசாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட துடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்
குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க போவதாக பொலிசாருக்கு கடிதம் ஒன்று இனம் தெரியாதேரால் நேற்று வியாழக்கிழமை (24) அனுப்பபட்டுள்ளதையடுத்து சம்பவதினமான இரவு உடனடியாக பொலிசார் நீதிமன்ற பதிவாளர் நீதவான் உடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கியதுடன் கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் மேப்பநாய் சகிதம் கட்டிடப்பகுதியை சுற்றி வெடிகுண்டை தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையினை 8 மணிவரை மேற்கொண்தை தொடர்ந்து நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்
இதேவேளை மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸாரான் காசிமின் ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment