கலாநிதி பீ.எம். ஹம்தூன் பேராசிரியராக பதவி உயர்வு!




 


#GTV


கலாநிதி பீ.எம். ஹம்தூன் பேராசிரியராக பதவி உயர்வு!


வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பீ.எம். ஹம்தூன் அரபுத்துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 


அக்கரைப்பற்று மத்திய கல்லூரி, அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான பேராசிரியர் பீ.எம். ஹம்தூன் தன்னுடைய இளமாணிப் பட்ட (BA) மற்றும் முதுமாணிப் பட்ட (MA)  கற்கைகளை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், மொழிபெயர்ப்பியலில் டிப்ளோமா மற்றும் கலாநிதி (PhD) கற்கைகளை இந்தியாவின் மிகப் பிரபல்யமான உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் கற்று, பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியில் பட்டப்பின் கற்கையையும் (PGDE) பூர்த்தி செய்துள்ளார். 


அரபு மொழிசார் ஆய்வு துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் பல சர்வதேச ஆய்வு மாநாடுகளில் கலந்து கொண்டு தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளமை முக்கிய அம்சமாகும். அத்துடன், பல்வேறு பன்னாட்டு ஆய்வுச் சஞ்சிகைகளிலும் இவருடைய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 22 வருட பல்கலைக்கழக கற்பித்தல் அனுபவமிக்க பேராசிரியர் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பேராசிரியராக பதவி உயர் பெற்ற முதல் முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.