( கல்முனை நிருபர்)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.சபீல் தலைமையில் நேற்று (24)நிந்தவூரில் இடம்பெற்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுல்ல (அம்பாரை)மாவட்டத்தில் போட்டியிட்டும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அவர்களின் வெற்றியினை உறுதிப்படுத்தும் வகையில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்க இதன்போது திட்டமிடப்பட்டது.
இந் நிகழ்வில் கட்சியின் வேட்பாளர்கள், தலைமைத்துவ சபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்த்கர்கள் கருத்துரைத்தனர்.
மேலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன் போது உரை நிகழ்த்தினர்.
இதன் போது பொது மக்கள் இளைஞர்கள் கட்சியின் நலன் விரும்பிகள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment