கடந்த 2024.10.17 ந் திகதியன்று அக்கரைப்பற்று பகுதியில் தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக Divisional Crime Detective Bureau (DCDB) இனால் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 140 மற்றும் 1981ம் ஆண்டின் 1ம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 69,75 ஆகிய பிரிவுகளை மீறிச் செயற்பபட்டதால் முன்னாள் எம்பி அதாவுல்லாஹ் உட்பட குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு DCDB கோரிக்கை விடுத்துள்ளது
இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் மூலம் முன்னாள் எம்பி அதாவுல்லாஹ் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் கௌரவ நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் சட்டத்தரணிகள் மூலமாக ஆஜரானார்.
கடந்த 2024.10.17 ந் திகதியன்று அக்கரைப்பற்றுப் பகுதியில் எந்தவித ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் மாறாக, தேசிய கோங்கிரஸின் தேசிய தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் அவர்கள் பள்ளிவாயலுக்குச் சென்று துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டு, திரும்பிக் கொண்டிருக்கும் போது, அவரது ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவரைப் பின்தொடர்ந்து வந்ததாக,சந்தேக நபர்கள் சார்பில் தோன்றிய சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தினை ஆராய்ந்த கெளாவ நீதிபதி AC ,ரிஸ்வான் இதுபோன்ற ஊர்வலங்களில் செல்வதை செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு குறித்த சந்தேக நபரான அதாவுல்லாவுக்கு கட்டளை பிறப்பித்தார்
ரூபா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்
Post a Comment
Post a Comment