நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடிகளில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பரிய சுகாதார சீர்கேடு இருந்து வந்த கழிவுகள் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சமூக சேவகர் சந்திரசேகரன் ராஜன் அவர்களது முயற்சியினால் கழிவு அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுனாமிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரியநீலாவணை 1 கிராமசேவகர் பிரிவில் பின்லாந்து அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு 625 குடும்பங்கள் வசித்து வரும் இத்தொடர் மாடிகளில் கழிவுநீர் மற்றும் மலசலகூட கழிவு என்பன மலசலகூடக் குழிகளில் இருந்து வெளியேறி வீதிகளிலும் தொடர்மாடிக் கீழ் பகுதிகளில் தேங்கிக்கிடந்த துடன் இதனை யாரும் கவனிக்காத நிலையில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக இருந்து வந்துள்ளது.
அதேவேளை அக்குடியிருப்புப் பகுதிகளில் சமூக ஆர்வலர் ஒருவரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச வகுப்புக்கள் நடைபெற்றுவருவதுடன் இவ்வகுப்புக்கு வருகின்ற மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் அவ்வழிகளால் பிரயாணம் செய்வதுடன் இச் சுகாதார சீர்கேட்டினால் சிறுவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகி வருவதாக பெற்றோர்கள் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க கல்முனை மாநகரசபையின் ஒத்துழைப்புடன் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அவ்விடத்தில் நின்று அப்பிரதேசத்தை தூய்மைப்படுத்தும் வேலையினை ஆரம்பித்துள்ளார்
அதேவேளை கழிவகற்றும் வாகனங்களை வழங்கி இரவு பகலாக ஒத்துழைப்பு வழங்கிய ஆணையாளர் என்.எம்.நௌபீஸ், உதவி ஆணையாளர் எம்.எஸ்.எம்.அஸீம், மாநகர பொறியியலாளர் ஜவ்ஸி அப்துல் ஜப்பார், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அர்சாத் காரியப்பர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் நசீம் சுகாதார பிரிவுக்குப் பொறுப்பான நௌசாட் அபூபக்கர் மற்றும் ஏனைய சிற்றூழியர்களுக்கும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் இதன்போது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment