வி.சுகிர்தகுமார்
பெரும்போக நெற்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாத்துக்கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அக்கரைப்பற்று பனங்காட்டு பகுதியில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு பயிரிடப்பட்டுள்ள வயல்காணிக்குள் நுழைந்து பயிரினை நாசம் செய்த கால்நடைகள் சிலவற்றை வயல் உரிமையாளர்கள் இன்று அடைத்து வைத்துள்ளனர்.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் மற்றும் விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் பொலிசார் ஆகியோருக்கும் தகவலை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கால்நடைகளை விடுவிக்கவேண்டுமெனில் உரிய நஷ்ட ஈட்டினை கால்நடை உரிமையாளர்கள் வழங்க வேண்டுமென்பதுடன் எதிர்காலத்தில் கால்நடைகளை விவசாய நிலங்களுக்குள் செல்லாதவாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment
Post a Comment