முஸ்லிம் காங்கிரஸ் இன்று வேட்புமனுத்தாக்கல்





 ( வி.ரி.சகாதேவராஜா)


 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்   அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று (11) வெள்ளிக்கிழமை  அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர் .

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எம் ஐஎம். மன்சூர், மற்றும் எம் எஸ். அப்துல் பாஷித், எம்எஸ். உதுமாலெப்பை, ஏ.எல்.தவம், ரஹ்மத் மன்சூர், ஏஎல்.முஸ்மி, ஏஆர்.அமீர்,கேஎச்.திலக் ரஞ்சித் ஆகியோர் ஒப்பிட்டுள்ளனர்.

இன்று பகல் 11.30 மணியளவில்  வேட்பாளர் பட்டியல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.