அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகப் பாதுகாப்புக் கடமையிலிருந்த (CDF)உத்தியோகத்தர் உயிரிழப்பு




 

அக்கரைப்பறறு நீதிமன்ற நீதிபதியின் தங்குமிட  வளாக பாதுகாப்பு அறையில் நேற்று இரவு கடமை புரிந்து கொண்டிருந்த  சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் , தாரிக்-46 வயது நிரம்பியவர் உயிரிழந்திருக்கின்றார்.

4 பிள்ளைகளின் தந்தையான இவர், அக்கரைப்பற்று நகர் பிரிவு 4ம் பிரில் வசித்துவருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சிறிது காலமாக இவர், சில நோய்களினால், பாதிக்கப்பட்ருந்தார். நேற்று மாலை இவர் அக்கரைப்பற்று நீதிமன்ற வளாக நீதிபதியின் வாசஸ்தல பாதுகாப்பு கடமைக்கூடத்தில் கடமையில் ஈடுபட்டுமிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாரையிலிருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிசார் தடயவியல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டனர். மரண விசாரணைகளை அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.சி .றிஸ்வான் அவர்கள் மேற்கொண்டதுடன் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர், ஜனாசாவினை உறவினர்களழடம் ஒப்படைக்குமாறும் பணித்திருந்தார்.