புளோரிடாவை புரட்டிபோடும் மில்டன் சூறாவளி




 



மில்டன் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

புளோரிடாவில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். முப்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

செயின்ட் லூசி கவுன்ட்டியின் கிழக்கு கடற்கரையில் மில்டன் சூறாவளியால் 4 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு கடற்கரையில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அதே நேரத்தில் புளோரிடாவில் வரும் நாட்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.

"சில வாரங்களுக்கு முன்பு புளோரிடாவை தாக்கிய ஹெலன் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது ஏற்பட்டிருப்பது 'மோசமான சூழ்நிலை அல்ல', என்றும் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.