(காரைதீவு சகா)
சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்கள் கடமையாற்றி 36 வருடம் கல்விச்சேவை ஆற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா
அவர்களுக்கு சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் சேவை நலன் பாராட்டு விழா அதிபர் மா.தர்மலிங்கம் தலைமையில் நேற்று (24) வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
முன்னிலை அதிதியாக நாவிதன்வெளி கோட்டக் கல்விப்பணிப்பாளரும் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளருமான பூ.பரமதயாளன் கலந்து சிறப்பித்தார்.
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான விபுலமாமணி வித்தகர் வீ.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக பாடசாலை பான்ட் வாத்தியம் முழங்க அதிதிகள் மாலை சூடி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் மா.தர்மலிங்கம் தலைமையில் சேவைநலன் பாராட்டு விழா நடைபெற்றது.
வரவேற்புரையை ஆசிரியை திருமதி தர்ஷினி தினேஸ்காந் நிகழ்த்த வாழ்த்துரை களை ஆசிரியர்களான திருமதி சாந்தினி மதிவண்ணன், திருமதி ரஞ்சனி தயாபரன்,உப அதிபர் கே.ஜெகதீசன்,எஸ்.அற்புதராஜா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
பிரதி அதிபர் திருமதி எஸ்.பிரியசாந்தினி பாராட்டுமடலை வாசித்து உரையாற்றினார்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன் வாழ்த்தி பிரதான உரையாற்றினார்.
சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்கள் கடமையாற்றி 36 வருடம் கல்விச்சேவை ஆற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா
அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் பிரதான உரையை அவர் நிகழ்த்தினார்.
.
பட்டதாரி ஆசிரியர் ந.கோடீஸ்வரன் விழாவை தொகுத்து வழங்கி நன்றியுரையாற்றினார்.
Post a Comment
Post a Comment