(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசகரும மொழிகள் திணைக் களத்தின் அனுமதியைப் பெற்று இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியானது அரச அலுவலர்களுக்காக இன்று (18) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
காரைதீவு பிரதேச செயலாளர் கணேசமூர்த்தி அருணன், உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் மற்றும் நலன்புரிச்சங்க செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment