சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை தாக்கிய தனியன் யானை







 பாறுக் ஷிஹான் 


தனியன் யானை ஒன்று திடிரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

இன்று  காலை அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை தமிழ் பிரிவு 4 - குவாசி நீதிமன்றத்திற்கு முன்னால்  உள்ள வீதியில் தனியன்  யானை ஒன்று வீட்டு காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 தினங்களாக தனியன்  யானை ஒன்று  சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்ற பகுதிகளில்  அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக  பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.