உலக உளச் சுகாதார தினம்







( வி.ரி. சகாதேவராஜா)
உலக உளச் சுகாதார தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்.த பிரபா சங்கர்  தலைமையில் வெகு  விமர்சையாக நேற்று  (10) வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

 வைத்தியசாலையின் உளச்சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கசுன் கடுவல மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ ஆர் நியாஸ் அஹமட் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின்  பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீன்  அதிதிகள் வரிசையில் கல்முனை (வடக்கு) ஆதார வைத்திய சாலையின் மனநோயியல் வைத்திய நிபுணர் வைத்தியர். அச்சினி சமரநாயக்க, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் மனநல மருத்துவர் ந. அருந்திரன் , சம்மாந்துறை ஆதார  வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் ஐ.எல்.எம் சபீக்
சம்மாந்துறை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ். எல்.எம் ஹனிபா சம்மாந்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  கே.டீ.எஸ். ஜயலத் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையினதும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையினதும்  வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

 சம்மாந்துறை பிரதேச செயலக, சம்மாந்துறை பொலீஸ் நிலைய மற்றும் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 நிகழ்வில் முதலாவதாக நடைப்பவனியும் இரண்டாவதாக வீதி நாடகமும் இறுதியாக உளநல மருத்துவர் டாக்டர் எம்.ஜே.நௌபல் அவர்களால் உளநல தொனிப் பொருளுடன் கூடிய விரிவுரையும் நிகழ்த்தப்பட்டது.

வீதி நாடகம் காரைதீவு விபுலானந்தா மத்திய மகா வித்தியாலய மாணவர்களால் நடிக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.