தேசிய வாசிப்பு மாத ஊர்வல நிகழ்வு




 



வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத ஊர்வல நிகழ்வு இன்று (30)இடம்பெற்றது.
கல்வி அமைச்சின் தேசிய நூலக பிரிவினால் வெளியிடப்பட்ட தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இந்நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பால் நாம் பெறும் பயன்கள் போன்றவற்றை தெளிவு படுத்திய பதாதைகள்  ஏந்தியவாறு இவ் ஊர்வலமானது இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில்
'வழிகாட்டும் தாரகைகளாம் நூல்கள் வாசிப்பால் வென்றிடுவோம் நாங்கள்'
 எனும் தொனிப் பொருளின் இடம்பெற்ற  ஊர்வல நிகழ்வுகளில், பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவத் தலைவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.