வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்ட இந்து குருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியான படகு சின்னத்தில் 6ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சிவஸ்ரீ பகிரதன் சுகிர்தன் ஜயா அவர்களை ஆதரிக்கவுள்ளதாக கல்முனை சர்வார்த்த சித்திவிநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ சச்சிதானந்த சிவம் குருக்கள் அவர்கள் தெரிவித்தார்.
நேற்று இரவு (23) அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அம்பாரை மாவட்டத்தில் பழமைவாத கட்சிகளால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவருவதற்காகவே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை ஆதரிக்கவுள்ளதாக கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த சிவஸ்ரீ பகிரதன் சுகிர்தன்
சமுகத்தின் தேவை அறிந்தே அரசியல்வாதிகள் செயற்படவேண்டும். மாறாக அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அரசியல்களம் மாறக்கூடாது. இந்நிலையில் ஆலயங்கள் ரீதியாகவும் சமூகம் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களை புறக்கணித்தே பல்வேறு அரசியல் செயற்பாடுகள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த கால அரசியல் தலைவர்கள் தீர்வை மக்களுக்கு வழங்காமல் பாராளுமன்ற ஆசனங்களை சூடாக்கியவர்களாக மாத்திரமே இருந்துள்ளனர்.
இவற்றை கருத்திற்கொண்டே அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க நான் களத்தில் குதித்துள்ளேன் என்றார்.

Post a Comment
Post a Comment