சம்மாந்துறை வலயமட்ட சிறுவர் தின விழா




 



( காரைதீவு சகா)

சம்மாந்துறை வலய மட்ட சர்வதேச சிறுவர் தின விழா வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார் வழிகாட்டலில் நேற்று சம்மாந்துறை அல்.முனீர் வித்தியாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஏல்.றஹீம் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யாசீர் அரபாத், எச்.நைரூஸ்கான் முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.சபூர்த்தம்பி, உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரிய ஆலோசகர்களான மௌலவி அஷ்ரப் பலாஹி , அகமட்லெவ்வை ,ரஷீத் ,சஜாத் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

பெருந்திரளான மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.