கெளரவிப்பு நிகழ்வு




 


பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயத்தில், இம்முறை நடைபெற்ற ஆங்கில மொழித்தினப் போட்டியில் பங்குபற்றி பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் வரை சென்று வெற்றி பெற்ற மாணவர்களான எம்.எம். பாத்திமா றுபைதா, மற்றும் எம்.கே. ஹைசன் ஹாமிஸ் ஆகியோர்களுக்கான கெளரவ நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஏ. தாஜஹான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலக ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் றாஜி சேர், மற்றும் றுபைதாவின் தந்தை ஏ. எம். மன்சூர் - ICT போதனாசிரியர், கற்பித்த ஆசிரியை ஏ.ஜே. சைக்கியா (English), ஹஜிஸ்தா ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இங்கு ஆங்கிலப் பாட ஆசிரியை சைக்கியா அவர்களுக்கு றக்கிபா ஆசிரியை அவர்களினால் பொன்னாடை போர்த்தப்பட்டு வாழ்த்துப் பாவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாகாணத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட றுபைதா அவர்களுக்கான சிறப்புப் பரிசினை ஜெசிலா Teacher English அக்கரைப்பற்றிலிருந்து வழங்கி வைத்த மை வலயத்திற்கு முன்மாதிரியான செயற்பாடாக அதிபர் அவர்கள் பாராட்டிப் பேசினார்.
இந்நிகழ்வில் ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் சிறப்புரையினை நிகழ்த்தினார். அதில் அடைவு மட்டம், இணைப்பாடவிதானம் ஆகியன சிறப்புற்று தேசிய மட்டத்தில் பேசப் படுகின்ற ஒரு பாடசாலையாக பொத்துவில் மினாறுல் உலூம் காணப்படுவதாக அதிபர் அவர்களைப் பாராட்டிப் பேசினார்.