( காரைதீவு சகா)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றமும் இணைந்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவையொட்டி நடத்திய இரண்டாவது கர்நாடக இசைக் கச்சேரி காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் இசைத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்ற அழகரெத்தினம் கல்யாண்சரண்( வாய்ப்பாட்டு ),சுதாகரன் கோவிசரண்( மிருதங்கம் ) ,பிரிசில்லா ஜோர்ஜ் ( வயலின்) ஆகியோர் இந்த கர்நாடக இசைக்கச்சேரியை ஒரு மணி நேரம் சிறப்பாக நடத்தினர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றத்தின் போஷகர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார் .
நிகழ்வில் விபுலானந்த பணி மன்ற செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.
Post a Comment
Post a Comment