கௌரவிப்பு




 



( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவிலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் செல்லும் 33 கல்விச் சாதனையாளர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

 காரைதீவு TRAKS & ASCO அமைப்பின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(19)  அமைப்பின் செயலாளர் எஸ்.நந்தகுமார் தலைமையில் இவ் விழா சிறப்பாக இடம்பெற்றது.

லண்டனில் வாழும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் வைத்தியர் அருளானந்தம் வரதராசன் தனது பெற்றோர் சார்பில் ஸ்தாபித்த இவ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் நான்காவது அரங்கு விழா இதுவாகும்.

இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 
பொது சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் நடேசன் அகிலன்
 கலந்து சிறப்பித்தார்.

நட்சத்திர அதிதிகளாக சிவ.ஜெகராஜன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம்,அம்பாரை) , கோ. அருணன்(பிரதேச செயலாளர், காரைதீவு ஏ. சுந்தரகுமார்(செயலாளர், பிரதேச சபை காரைதீவு)  ஆ. பார்த்தீபன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், மகாணக் கல்வித் திணைக்களம்) ,  வி.ரி. சகாதேவராஜா (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைதீவு) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

விழாவில் மண்ணுக்கு மகிமை சேர்த்தவர்கள் வரிசையில் பொது சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் நடேசன் அகிலன்,
சிவ.ஜெகராஜன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம்,) ,
வி.ரி. சகாதேவராஜா (ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைதீவு) ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும்,
விஞ்சைமிகு அதிதிகளாக வைத்தியர் மஞ்சுரேகா பிரசாந்தன் (ஆதார வைத்தியசாலை,கல்முனை வடக்கு) , வைத்தியர் கீர்த்திகா ரகுமதன்
(அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை,கல்முனை).
ஏ.மகேந்திரராஜா (ஓய்வுநிலை BOC - முகாமையாளர் காரைதீவு) வைத்திய அதிகாரிகளான மைத்ரி தினேஸ்காந்த் (ஆதார வைத்தியசாலை,கல்முனை வடக்கு)  வி. றேணுபிரியக்ஷன் (ஆதார வைத்தியசாலை,திருக்கோவில்) . கே. ஆதர்ஷன் (ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை) மற்றும், எஸ். மணிமாறன் (அதிபர், சண்முகா மகா வித்தியாலயம் காரைதீவு) ஆசிரியர் ஆர்.இரட்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன்,
 வித்திய அதிதிகளாக ரி.தெய்வீகன் B.Sc. , கே.ருத்திரமூர்த்தி B.Sc., எஸ். தேவகுமார் M.Sc, R.Sc.,இ.சங்கீத் B.Sc.
திருமதி. J. சந்திரசேகரம் B.A. ,  எஸ் பத்மநாதன் M.Ed. , திருமதி. சி. றுசிகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இத்துடன் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிறப்பு கௌரவிப்புக்களும் பணப்பரிசில்களும் பதக்கங்களும் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் பி.கேதீஸ் நன்றியுரையாற்ற நிகழ்ச்சிகளை வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா தொகுத்தளித்தார்.