மாதர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி






 ( வி.ரி.சகாதேவராஜா)


தொழில் முயற்சிகளுக்கு பெண்களை வலுவூட்டல். 
எனும் தொனிப்பொருளின் கீழ்,  மாதர் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் காரைதீவில் இடம் பெற்றது.

காரைதீவுப் பிரதேச செயலாளர் கோ.அருணனின் தலைமையில் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

 பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சிவஞானம் ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.

அங்கு  மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தினரால் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப் படுத்தி, விற்பனையும்  செய்யப்பட்டது .

இதன் போது காரைதீவு பிரதேச மாதர் சங்கங்களினால் முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமான சிவ.ஜெகராஜன் மற்றும் சிறப்பாக பயிற்சிகளைமுடித்த மாணவர்கள் அதன் ஆசிரியர் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்கள் கௌரவப்படுத்தி பாராட்டப்பட்டனர்.