மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்







பாறுக் ஷிஹான்


சவப் பெட்டி தூக்கி மக்கள்  மதுபான சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  

கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம்  ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று   ஆரம்பமான குறித்த போராட்டம்   பாடசாலைமாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறா இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட கோரிக்கை முன்வைத்தனர்.