'கொள்கை எதிரி, அரசியல் எதிரி' என்று நடிகர் விஜய் யாரை குறிப்பிட்டார்?





  நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது.

நடிகர் விஜய், மாநாட்டுக்கு வந்து, திடலில் இருக்கும் ரசிகர்களைச் சந்தித்தார். அதன்பின், கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதில் கட்சி ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின், விஜய் தனது கட்சியின் கொடியை பட்டன் அழுத்தி ஏற்றினார். மாநாடு நடக்கும் இடத்தில் என்ன நடக்கிறது? நிலவரம் என்ன?