எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகின.
அதன்படி தேசிய மக்கள் சக்தியினர் முன்னிலையில் உள்ளனர்.
17 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை
வென்றுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை வென்றது.
அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சுயேட்சை குழு 2,568 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி 1,350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை வென்றது.
தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.
Post a Comment
Post a Comment