( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் பயிலும் உயர் வகுப்பு மாணவர்களுக்கான உளவள செயற்பாடு தொடர்பான செயலமர்வு நேற்று முன்தினம் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் பழைய மாணவரும் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் தர்மலிங்கம் பிரபாசங்கர் தலைமையிலான வைத்திய குழுவினர் அங்கு அந்த பயிற்சியை நடத்தினார்கள்.
வைத்திய அதிகாரிகளான டாக்டர் நௌபல் டாக்டர் கசுன் ஆகியோர் வளவாளராக செயல்பட்டார்கள்.
மாணவர்கள் மத்தியில் பரீட்சை காலத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் மற்றும் உளநெருக்கிடைகள் அவற்றை கையாளுகிற வழிமுறைகள் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment