நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு(4th International Conference on Science and Technology - ICST2024) தொழில்நுட்பவியல் பீட பிரதான கேட்போர் கூடத்தில் 2024.10.16 ஆம் திகதி மாநாட்டின் தலைவரும் பதில் உபவேந்தரும் பீடாதிபதியுமான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
ஆய்வு மாநாட்டை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழினுட்பவியல் பீடம் (Faculty of Technology) ஏற்பாடு செய்திருந்தது. இதனுடன் SLAAS ( Eastern Chapter) உம் ஒன்றிணைந்திருந்தது.
மாநாட்டின் இணைப்பாளரும் பயோ சிஸ்டம் டெக்னாலஜியின் துறைத் தலைவருமான கலாநிதி முனீப் எம். முஸ்தபாவின் வழிகாட்டலிலும் ICST 2024 செயலாளர் ஏ.ஆர். பாத்திமா ஷபானாவின் நெறிப்படுத்தலிலும், “நிலையான எதிர்காலத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையான எல்லைகளை ஆராய்தல்” (“Exploring Innovative Horizons Through Modern Technologies for a Sustainable Future”) எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இடம்பெற்றது.
மாநாட்டுக்கு விசேட பேச்சாளர்களாக பிரித்தானியாவின் Huddersfield பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிலாந்தி அமரதுங்க மற்றும் தாய்லாந்தின் Asian Institute of Technology யின் உதவி பேராசிரியர் Chaklam Silpasuwanchai ஆகியோர் நிகழ்நிலையூடாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
ICST2024 ஆய்வு மாநாட்டுக்கு 81 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் 52 கட்டுரைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விவாதிக்கப்பட்டன. நிகழ்வின் Technical Session ல் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வுக்கு லைக்கா ஞானம் பவுண்டேஷன் மற்றும் MYOWN Education Aid என்பன முழு அனுசரணை வழங்கியிருந்தன.
கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி ஏ.எம்.எம். முஸ்தபா, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ், நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர் எம்.எச். தௌபீக், லைக்கா ஞானம் பௌண்டேசன் அம்பாறை இணைப்பாளர் அகிலன் MYOWN Education Aid இன் பிரதிநிதிகள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள், நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
Post a Comment