பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழு-21 இல் கைக்கோடாரி சின்னத்தில் இளம் தொழிலதிபர் டி.எம்.எம் ஹினாஸ் தலைமையில் சுயேட்சைக் குழுவின் தேர்தல் காரியாலயம் திறப்பு விழா இன்று இரவு கல்முனை செயிலான் வீதியில் இடம்பெற்றது.
சமூக சிந்தனை கொண்ட இளம் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து ஏழை மக்களின் நலனுக்காகவும் கல்முனையின் இருப்புக்காகவும் கட்சி பேதமின்றி பிரதேச வேறுபாடுகள் கடந்து இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
இக் தேர்தல் காரியாலய திறப்பு விழாவில் சுயேட்சை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment