மாணவர் தூதுவர் மாநாடு-2024




 


நூருல் ஹுதா உமர்


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேலைத்திட்ட மாணவர் தூதுவர் மாநாடு காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் யூ.எல். அசாருதீன் மற்றும் காரைதீவு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜீ.ரேவதி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவஞானம் ஜெகராஜன் கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி வலயங்களை சேர்ந்த மாணவ தூதுவர்கள் பதிவு செய்யப்பட்ட மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும் என் 100 பேர்கள் கலந்து கொண்டனர் அத்தோடு இந்நிகழ்விற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் வலயக் கல்வி, முறைசாரா கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்து தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் வளவாளர்களாகவும், ஒருங்கிணைப்பாளர் களாகவும் அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் அம்பாறை, சம்மாந்துறை, நிந்தவூர் செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்