ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நியூசிலாந்தின் கனவு இறுதியாக நனவாகியிருக்கிறது.
நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது மூன்றாவது முயற்சியில் நியூசிலாந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு முன், 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை சென்றது நியூசிலாந்து மகளிர் அணி.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த பிறகும் தென்னாப்பிரிக்காவால் கோப்பையைக் கைப்பற்ற முடியாமல் போனது.
கடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடிய 10 வீராங்கனைகள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினர். ஆனால் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.
விளம்பரம்
நியூசிலாந்து அணி சாம்பியன் ஆனதும், ஒட்டுமொத்த அணியும் கேப்டன் சோஃபி டிவைனைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அனைத்து வீராங்கனைகளின் கண்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கேப்டன் சோஃபி டிவைன் என்ன சொன்னார்?
இந்த வெற்றி குறித்துப் பேசிய நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், "முந்தைய நாள் இரவு எனது அணியுடன் கோப்பையை கைப்பற்றுவது போல் கனவு கண்டேன். பத்து தொடர் தோல்விகளுக்குப் பிறகு கோப்பையை வென்றிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து சரியான திசையில் பயணித்தோம். அதன் பலன்தான் இது,” என்றார்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், "இறுதி ஆட்டத்தில் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. ஏழாவது ஓவருக்கும் 11-வது ஓவருக்கும் இடையே எங்களது ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது என் கருத்து. ஆனால் வெற்றியின் பெருமை நியூசிலாந்து அணிக்கே சேரும்," என்றார்.
நியூசிலாந்துக்கு முதன்முறையாகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததில் ஒரு வீராங்கனை முக்கியப் பங்கு வகித்தார் என்றால், அது அமெலியா கெர்தான். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, ஐந்து விக்கெட்டுகளுக்கு 158 ரன்களை எட்டச்செய்தார். அவர் 43 ரன்கள் எடுத்தார்.
டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க அணியால் நியூசிலாந்தைத் தோற்கடிக்க இயலவில்லை
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா
முதல் விக்கெட் வீழ்ந்தபோது களம் இறங்கிய அமெலியா, விக்கெட்டில் திடமாக நின்று அணியை பலப்படுத்தினார்.
தொடக்கத்தில் உறுதுணையாக விளையாடிய அவர், கடைசி நிமிடத்தில் தனது கூர்மையான ஆட்டத்தால் அணி நல்ல ஸ்கோர் பெற உதவினார்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் கூட ‘மேட்ச் சேஞ்சர்’ என்று கருதப்படும் ஒரு வீராங்கனை.
அவர் விளையாடும் போதே தென்னாப்பிரிக்கா தனது கோப்பைக் கனவை நனவாக்க முடியும் என்று தோன்றியது.
ஆனால் பத்தாவது ஓவரின் முதல் பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் தனது அணிக்குச் சாதகமாக மாற்றினார் அமெலியா.
அமெலியா சிறப்பான சுழற்பந்து வீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அமெலியாவைத் தவிர, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட்டுக்கு 126 ரன்களுக்கு மட்டுப்படுத்தியதில் அந்த அணியின் பவுலர் ரோஸ்மேரி மேயரும் முக்கியப் பங்காற்றினார். அவரும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அமெலியா, "இந்த வெற்றியைப் பற்றிப் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றி பெற்ற பிறகு நான் கொஞ்சம் உற்சாகமாக இருந்தேன். ஃபீல்டிங் செய்யும் போது எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் என்னால் எனது பொறுப்பை நிறைவேற்ற முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி," என்றார்.
ஹமாஸ் தலைவர் 'சின்வார் கொல்லப்பட்ட வீடு என்னுடையதுதான்' - பிபிசியிடம் கூறிய காஸா நபர்
டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இறுதிப் போட்டியில் அமெலியா கெர் சிறப்பாக விளையாடினார்
ஆண்கள் அணியால் செய்ய முடியாத சாதனை
நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியால், ஒருமுறை மட்டுமே (2021-ஆம் ஆண்டு) ஐசிசி டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை வர முடிந்தது. ஆனால் கோப்பையை வெல்லும் அதன் கனவு இன்னும் நிறைவேறவில்லை.
ஆனால், நியூசிலாந்து மகளிர் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் சாதித்திருக்கிறது. பெண்கள் அணி சாம்பியனான நிலையில், இப்போது ஆண்கள் அணியும் இதிலிருந்து உத்வேகம் பெறக்கூடும்.
டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,பவர் பிளேயிலும் தென்னாப்பிரிக்க அணி மோசமாகச் செயல்பட்டது
பவர்பிளேயை இழந்த தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வோல்வார்ட் மற்றும் தாஜ்மின் பிரிட்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.5 ஓவரில் 51 ரன்கள் சேர்த்த போது, அணி வெற்றியை நோக்கி நகர்வது போல் இருந்தது.
அந்த நேரத்தில் வூல்வர்ட் முழு ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்தார். இந்த ஜோடியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.
தஜ்மினின் விக்கெட் வீழ்ந்ததால் இந்த பார்ட்னர்ஷிப் முறிந்த பிறகு, வோல்வார்ட் மூலம் நியூசிலாந்து அணிக்குக் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், பத்தாவது ஓவரில் வோல்வார்ட், போஷ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அமெலியா போட்டியை ஓரளவு தனக்குச் சாதகமாக மாற்றினார்.
அடுத்த 13 பந்துகளில் மரிஜான் கேப் மற்றும் டி கிளர்க்கின் விக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டபோது போட்டியின் முடிவு பெரிதும் தீர்மானமாகிவிட்டது.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் வெற்றிக்காக தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம் அமைத்த முஸ்லிம் வணிகர் - எங்கே?
டி20, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பெண்கள் அணிபட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இப்போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டது
சிறந்த பீல்டிங்கால் உருவான அழுத்தம்
நியூசிலாந்து ஆக்ரோஷமாகத் தொடங்க முயற்சித்தது. இதற்குச் சான்றாக இரண்டு ஓவர்களில் நான்கு பவுண்டரிகள் அமைந்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களைச் சுதந்திரமாக ஷாட்களை விளையாட அனுமதிக்கவில்லை.
நியூசிலாந்து பேட்டர்களான சுசி பேட்ஸ் மற்றும் அமெலியா கெர் வெளியே வந்து ஷாட்களை ஆடிய போதெல்லாம், அவர்களால் எச்சரிக்கையான பீல்டர்களை ஊடுருவி வெற்றிபெற முடியவில்லை.
பொதுவாக அணிகள் மிடில் ஓவர்களில் வேகமாக ரன்களை எடுக்க முயற்சிக்கும். ஆனால் தென்னாப்பிரிக்கச் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக டிரையன் மற்றும் மலாபா ஆகியோர் தொடர்ந்து பந்துவீசி ரன்களின் வேகத்தை அதிகரிக்காமல் தடுத்தனர்.
இதில், பேட்டர்களை பவுண்டரி அடிக்க விடாமல் தடுப்பது முக்கியப் பங்காற்றியது. எட்டாவது மற்றும் 13-வது ஓவர்களுக்கு இடையில் பவுண்டரிகள் அடிக்கப்படாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர்.
டி கிளர்க் வீசிய 15-வது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து ரன் வேகத்தை அதிகரித்தார் ஹால்லிடே. இதன் பிறகு, மற்ற பேட்டர்களும் அடித்து ஆட முயன்றனர். இதன் காரணமாக அந்த அணி ஐந்து விக்கெட்டுக்கு 158 ரன்களை எட்டியது.
அரபு உலகின் பாரிஸ் என்று கருதப்பட்ட 'பெய்ரூட்' நகரம் அழிவின் பிடியில் சிக்கியது எப்படி?
1
நியூசிலாந்து அணி எப்படிச் சமாளித்தது?
தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சு மற்றும் சிறந்த பீல்டிங் காரணமாக, நியூசிலாந்து அணி பவுண்டரிகள் அடிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது.
ஆனால் இதையும் மீறி விக்கெட்டுகளுக்கு இடையே தொடர்ந்து ஓடினர். ரன்களின் வேகத்தை அவர்கள் குறையவிடவில்லை.
கடைசி 5-6 ஓவர்களில் நியூசிலாந்து அணி விரைவாக ரன்களைக் குவித்தது.
அமெலியா கெர் ஒரு முனையைச் சமாளித்தபடி ரன்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். ப்ரூக் ஹால்லிடே அவருக்கு ஒரு நல்ல துணையாக இருந்தார்.
ஹால்லிடே 135 ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்து 28 பந்துகளில் 38 ரன்களை எடுத்தது மட்டுமின்றி, அமெலியாவை வேகமாக ரன் எடுக்கத் தூண்டினார்.
Post a Comment
Post a Comment