இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) நேர்முக பரீட்சை தெரிவு.




 



மஹ்மூத் ஆசிரியை றுஸ்தா இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) நேர்முக பரீட்சை தெரிவு.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவி, உயர்தர உயிர் முறை தொழில்நுட்பப் பிரிவின் ஆசிரியை, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான இளமானி பட்டத்தரியுமான பாத்திமா றுஸ்தா றியாஸ் அவர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023,2024ம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேர்மை, அர்ப்பணிப்பு, பொறுப்புணர்ச்சி, ஆளுமை, ஒழுக்கம், கல்வி அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அற்பணித்த எமது கல்லூரி ஆசிரியை பாத்திமா றுஸ்தா றியாஸ் வாழ்த்தி பாராட்டி கெளரவிப்பதில் பாடசாலை சமூகம் பெருமிதம் கொள்கின்றது.
இவ்வெற்றியின் மூலம் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் எதிர்வருகின்ற அனைத்து தேர்வுகளிலும் பாத்திமா றுஸ்தா றியாஸ் வெற்றி பெற கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS), பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் நெஞ்சார்ந்த
பாராட்டுக்களையும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.