யாழ். போதனா வைத்தியசாவையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
பு.கஜிந்தன்
Post a Comment
Post a Comment