கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (ச/த) பரீட்சையில் வரலாற்று சாதனை







நூருல் ஹுதா உமர்


கடந்த சில தினங்களுக்கு முன்னர் (29) இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (ச/த) பரீட்சை - 2023 (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வரலாற்றில் முதற் தடவையாக "26" மாணவிகள் அனைத்து பாடங்களிலும் 9A அதி திறமை சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதுடன் 8AB உள்ளடங்கலாக "33" மாணவிகளும், 8AC  உள்ளடங்கலாக "07" மாணவிகளும் அதி திறமைச் சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தர 2023 (2024) பரீட்சையில் சித்தி பெற்று உயர்தர பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும், பாடசாலைக்கு அதி சிறப்பு சித்திகளைப் பெற்று பெருமை சேர்த்த  மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையில் அனைத்து வழிகளிலும் வழிகாட்டியாக இருந்து செயற்பட்ட கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS), பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளப்பட்டுள்ளது.