விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராக மகேசன் நியமனம்




 



( வி.ரி.சகாதேவராஜா)


 விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் மீண்டும் பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சின் செயலாளராக புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய 14 அமைச்சுக்களின் செயலாளர்களுள் ஒரேயொரு  நிருவாக சேவையின் மூத்த தமிழ் உயரதிகாரி திரு மகேசன் ஆவார்.

 முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரான கணபதிப்பிள்ளை மகேசன் மீண்டும்                                                  பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்களில் ஒரேயொரு தமிழராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 மட்டக்களப்பு வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைதீவில் திருமணம் செய்தவராவார். வாழைச்சேனை விஷ வைத்தியர் கணபதிப்பிள்ளை அதே பரம்பரையில் வந்த பொன்னம்மா தம்பதியினரின் பத்தாவது மகன் மகேசன் ஆவார். வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் பயின்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தையும் சர்வதேச வணிகத்தில் எம்பிஏ பட்டத்தையும் (ஆசிய தொழில்நுட்ப நிறுவனம்- தாய்லாந்து), LLB (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்), சர்வதேச உறவுகளில் PGD (BCIS) பட்டத்தையும் பெற்றவராவார்.

கே. மகேசன், தற்போது இலங்கை நிர்வாக சேவையின் (SLAS - சிறப்பு தரம்) மிக மூத்த அதிகாரியாக உள்ளார் .

அவர் 1991 இல் இலங்கை நிருவாக சேவையில் SLAS இல் இணைந்தார்.
அவர் பிரதேச செயலாளராகவும், மேலதிக மாவட்ட செயலாளராகவும்   பணியாற்றியுள்ளார்.