மருதமுனையில் வெல்லும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து
மாளிகைக்காடு செய்தியாளர்
மருதமுனை கடற்கரை வீதியில் வெல்லும் வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான சட்டத்தரணி ஏ.எம் றக்கீப் தலைமையில் (18) நடைபெற்றது.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சமகால அரசியல் நிலைகள் தொடர்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி மேயரும் கட்சியின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பை, முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர் அமீர், எம்.எஸ்.எம் ஹாரீஸ் (நவாஸ்), எம்.எம் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளர் ஏ.சப்றாஸ் நிலாம், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment