( வி.ரி.சகாதேவராஜா)
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி மாவட்ட இணைப்பாளர் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மூன்று தினங்களாக கல்முனை, பாண்டிருப்பு,, நாவிதன்வெளி, சம்மாந்துறை பிரதேசங்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்.
ஒப்பிட்டு ரீதியில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சாதகமாக இருக்கும், ஆகவே மக்கள் கேஸ் சிலின்டருக்கு புள்ளியடியிட்டு ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச்சசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment