ஆட்கடத்தலை தடுக்கும் கிராம மட்ட விழிப்புணர்வு




 



நூருல் ஹுதா உமர்

பாதுகாப்பான புலம்பெயர் தொழில் மற்றும் ஆட்கடத்தலுக்கு உள்ளாதல் தொடர்பான விழிப்புணர்வு வேலைதிட்டத்தை மனித அபிவிருத்தி தாபனம் புடழடியட ஐnவையைவiஎந அனுசரனையில் இலங்கையில் ஆட்கடத்தலை எதிர்த்து சமூதாய நியாயபிரசாரம் எனும் செயற்பாட்டினூடாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில்  நிந்தவூர், கல்முனை, காரைதீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு கிராம மட்டங்களில் பிரச்சினைக்கு உட்பட்டவர்கள், கிராம மட்ட தலைவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் பங்குபற்றினர்.

மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட பிரதி இணைப்பாளர் எம்.ஐ. றியாழின் நெறிப்படுத்தலில் நடைபெற்றுவரும், இவ் விழிப்புணர்வு செயற்பாடுகளில் குறித்த பிரதேச செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு பாதுகாப்பான புலம்பெயர் தொழில் மற்றும் ஆட்கடத்தலுக்கு உள்ளாதல் தொடர்பாக மக்களை விழிப்பூட்டி தெளிவுபடுத்தி வருகின்றனர்.