ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார்
நாட்டின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிமுதல் ஆரம்பமான நிலையில் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனும் தனது வாக்கினை அக்கரைப்பற்று இராமகிருஸ்மிசன் மகாவித்தியாலயத்தில் அளித்தார்.
அம்பாரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அமைதியான முறையில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் ஆரம்பமாகி வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாக்களிப்பு காலை வேளை மந்தகதியில் இடம்பெற்று வந்தாலும் கூட தற்போது மக்கள்; ஆர்வம் காட்டி வருவதை காண முடிகின்றது.
அம்பாரை மாவட்டத்தில் 30 வீதமான வாக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காலை 10 மணிவரை 27.71 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
கபே அமைப்பு உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பு தொடர்பில் அவதானித்து வருகின்றனர்.
பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருவதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment