ஸ்ரீலங்கா கிரிக்கெட் கவுன்சில் வழங்கிய விளையாட்டு உபகரணங்கள்!




 


( காரைதீவு சகா)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் கவுன்சில் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை காரைதீவு விளையாட்டு கழகத்திற்கு வழங்கியுள்ளது .


விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டு அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அதனை நேரில் சென்று கழகச் செயலாளர் எஸ்.கிருஷாந்தனிடம் வழங்கி வைத்தார் .

இதற்கு இணைப்பாளராக இருந்து செயல்பட்ட விளையாட்டு கழக ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி. சகாதேவராஜா மற்றும்  விளையாட்டு உத்தியோகத்தர் லோ.சுலக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.